posted 5th October 2022
எம்.ஏ.எம். முர்ஷித்
முழுத் தீவுக்குமான (இலங்கை) சமாதான நீதவானாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். முர்ஷித் நியமனம்!
நிந்தவூர் 13 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மது முர்ஷித் இன்று (05.10.2022) முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக ( Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டு, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
முஹம்மது அனிபா, சித்தி ஹனூன் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரான இவர் நீண்ட காலமாக கலை, இலக்கியம் மற்றும் ஊடகம் சார் துறைகளில் ஈடுபாடு காட்டிவருவதோடு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)