
posted 17th October 2022
நியூஸீலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லிடொன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்துக் கலந்துரையாடினார்.
அதன்போது உயர் ஸ்தானிகராலய கொள்கை வகுப்பு ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க, தலைவரின் இணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)