சட்டவிரோதமாக வைத்திருந்த மஞ்சள் மொத்தமாக்க கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் கையிருப்பு ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 66ஆவது டிவிசன் பகுதியைச் சேர்ந்த இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டபோதே இவை மீட்கப்பட்டது.

கடல் மார்க்கமாக, சட்டவிரோதமான முறையில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 65 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சள் மற்றும் 03 பைகளில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக வைத்திருந்த மஞ்சள் மொத்தமாக்க கைப்பற்றப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More