சட்டவிரோத  மீன் வியாபாரிகளுக்கு எதிராக   நடவடிக்கை

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சட்டவிரோத மீன் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

நிந்தவூர் பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத மீன் விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதிகள் நாற்சந்திகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்மைக் காலமாக சட்டவிரோதமான மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதுடன் பல்வேறு விபத்து சம்பவங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனை அடுத்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நிந்தவூர் பிரதேச சபை நிந்தவூர் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஒன்றிணைந்து இவ்வாறான சட்ட விரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கை இடம்பெறும் இடங்களை இன்று அடையாளப்படுத்தி எச்சரிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த துண்டுப் பிரசுரத்தில் ஏலவே நிந்தவூர் பிரதேச சபை சட்ட விரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கூறி பிரேரணைகளை நிறைவேற்றி கட்டுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் இவ்வாறான சட்ட விரோத வியாபாரங்கள் குறிப்பாக மீன் விற்பனை முக்கிய சந்திகளில் சட்ட விரோதமாக அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தற்போது பல்வேறு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது இன்று தியேட்டர் வீதி, அலியாண்டை சந்தியில் இவ்வாறு எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டதுடன் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வருமானவரி பரிசோதகர்கள், பொதுச்சந்தை குத்தகைக்காரர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சட்டவிரோத  மீன் வியாபாரிகளுக்கு எதிராக   நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More