கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்

"கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்னும் தொனிப்பொருளில் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 40ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேசத்தின் நீலியாமோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தில் செட்டிகுளம் பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய, நன்னீர் மீனவ அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல்தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம், எமக்கு வேண்டும் எங்கள் நிலம், ஒன்று கூடு்வது எமது உரிமை, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் போன்ற பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More