கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் – 21.11.2021

யாழ்ப்பாணம் மானிப்பாயின் பிரபல வர்த்தக நிலையம் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவகுமார் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார் என தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று நண்பகல் அவர் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உயிரிழந்த குமாரசாமி சிவகரன் (வயது-50) என்பவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த நபரின் பி.சி.ஆர் மாதிரிகள் 20ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் 20ஆம் திகதி சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 21.11.2021 மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 508 பேருக்கு 21.11.2021 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றுக்கு உள்ளான 14,108 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிறந்து 10 நாட்களேயான பச்சிளம்குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 212 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில்,

வவுனியா மாவட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள பிறந்து 10 நாட்களேயான பெண் குழந்தை ஒருவர் உட்பட இருவர் செட்டிகுளம் பிரதேச மருத்துவமனையில் 02 பேர் என வவுனியா மாவட்டத்தில் 4 பேர் இனங்காணப்பட்டனர்.

மன்னார் மாவட்ட மருத்துவமனையில் 4 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 03 பேர், மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டனர்.

கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் – 21.11.2021

எஸ் தில்லைநாதன்

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More