கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் ( 26.11.2021)

இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,833 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 406 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து தற்போது சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,795 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் ஆண்கள் 16 பேர் உட்பட மேலும் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 பெண்களும் 16 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் உட்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் ( 26.11.2021)

எஸ் தில்லைநாதன்