கொழும்பு வன்முறைக்கு பதில் சொல்ல வேண்டிய மூவர்

திங்கள் கிழமை (09.05.2022) கொழும்பில் நடைபெற்ற வன்முறைக்கு ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபதியாகிய மூவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இவர்கள் உடன் தங்கள் பதவிகளிலிரந்து இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் திங்கள் கிழமை (09) கொழும்பில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்

இலங்கை மக்களினதும் எங்களினது நிலைப்பாடானது ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் பதவிகலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

தற்பொழுது பிரதமர் இராஜினாமா செய்திருப்பதை ஜனாதிபதி எற்றுக் கொண்டிருப்பார் என நினைக்கின்றேன்.

ஏனென்றால் எற்கனவே பிரதமர் தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டு இருந்தார்.

இந்த விடயத்தில் எங்கள் கருத்தும் மிகவும் தெளிவாகவே இருந்தது. இருவரும் உடனடியாக தங்கள் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே.

தற்பொழுது பிரதமர் இராஜினாமா செய்திருந்தாலும் ஜனாதிபதியும் இராஜினாமா செய்ய வேண்டும்.

விஷேடமாக இன்று (திங்கள்கிழமை 09.05.2022) இடம்பெற்ற நிகழ்வை பார்க்கும்போது பிரதமர் இராஜினாமா செய்வது மட்டுமல்ல அவர் வன்முறையை தூண்டியமைக்காக கைது செய்யப்பட வேண்டும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தங்கள் ஆதரவாளர்களை கொழும்புக்கு வரவழைத்து கடந்த ஒரு மாத காலமாக அமைதியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருந்தவர்களின் மீது இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டதிற்காக மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும்.

ஆனால் இத்துடன் இவ் போராட்டம் நின்று விடாது இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச

ஆகையினால் கோட்டபாய ராஜபக்ச உடனியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும்.

இடைக்கால அரசு இனி சரி வருமோ என்பது தெரியாது. ஜனாதிபதியால் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இன்று (09) நடைபெற்ற நிகழ்வை பார்க்கின்றபோது இவ்வாறான இடைக்கால் அரசு ஒன்று உருவாக முடியாதுள்ளது

ஆனால் இருவரும் பதவி விலகி இடையில் ஒரு காபந்து அரசு நிறுவப்பட்டு தேவைகள் ஏற்பட்டால் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவை எற்பட்டுள்ளது.

இன்று (09) நடைபெற்ற வன்முறையானது பிரதமர் தனது ஆதரவாளர்களை கொழும்புக்கு வரவழைத்து அவர்களுடன் ஒரு கூட்டத்தை நடாத்திய பின்பே இவ் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.

ஆகவே இதற்கான பொறுப்பை மகிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும். அவரின் வீட்டுக்கு முன்பாக இருந்த ஆர்ப்பாட்டகாரர்களைத் தாக்கி அவர்களின் கூடாராங்களை தீயிட்டு கொழுத்திய பின்பு இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த ஆர்பாட்டக்காரர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்த இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்து வரும் வரைக்கும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கு ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபதியும் பொறுப்பாளிகள். ஆகவே பொலிஸ் மா அதிபதியும் தனது பதவியிலிருந்;து விலக வேண்டும் என்பதே ஆகும்.

இந்த பிரச்சனையில் வெளிநாடுகள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது நாட்டுக்குள்ளேயே இவ் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உடனடியாக பதவி விலகினால்தான் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு வன்முறைக்கு பதில் சொல்ல வேண்டிய மூவர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY