கைத்தொலைபேசி களவாடும்  கும்பல் சிக்கியது

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கைத்தொலைபேசி களவாடும் கும்பல் சிக்கியது

நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளைத் திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் கைத்தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை கடந்த திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் கைதாகிய 2 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி வைத்தியசாலைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோரை பிரதானமாக இலக்கு வைத்து சக நோயாளர்களாகவும் சிற்றுழியர்களாகவும் நடித்து சூட்சுமமாக இக்கைத்தொலைபேசிகளைத் திருடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பொது இடங்கள், கல்முனை பிரதான பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மண்டூர், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் இக்கைத்தொலைபேசி திருட்டினால் தமது பெறுமதியான கைத்தொலைபேசிகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைத்தொலைபேசி களவாடும்  கும்பல் சிக்கியது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More