
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் மரணம்
குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (03) உயிரிழந்தார்.
பண்டத்தரிப்பு - செட்டிக்குறிச்சியை சேர்ந்த குணசேகரம் வரதசிரோன்மணி என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, அவரின் வீட்டருகே உள்ள காணிக்குள் பனையோலை எடுக்க சென்றுள்ளார். அந்தச் சமயம் கருங்குளவி கொட்டுக்கு இலக்கானார்.
சங்கானை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவ,ர் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மரண விசாரணையை நடத்தினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)