
posted 3rd May 2022
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகள் காரணமாக கடந்த சில வருடகாலமாக சோபை இழந்து வீடுகளுக்குள் முடங்கியவாறு கொண்டாடப்பட்ட முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் இம்முறை வெகு குதூகலமாகக் கொண்டாடப்பட்டன.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு, கொவிட் பரவல் போன்ற காரணங்களால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம்களினதும், ஏனையோரதும் பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் கடந்த வருடந்தகளில் சோபை இழந்து நடைபெற்றுவந்தன.
குறிப்பாக இம்முறை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி நாட்டிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் நோன்புப் பெருநாள் தொழுகை, பள்ளிவாசல்களிலும், திறந்த வெளித் திடல்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றமை சிறப்பு அம்சமாக அமைந்தது.
குறிப்பாக பெருநாள் தொழுகைகளில் ஆண்களும், தனியாகப் பெண்களும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கிலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களெங்கும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் சிறப்புறக்களை கட்டியிருந்தது.
பெருநாள் மிட்டாய் வியாபார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், பெருநாள் சிறப்பு நிகழ்வுகளும் வழமை போன்று இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தைச் சேரந்த நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப்பள்ளி வாசல், தஃவா பிரிவின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை திடல் தொழுகையாக இடம்பெற்றது.
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருமளவான ஆண்களும், பெண்களும் (தனியாக) கலந்து கொண்டனர்.
ஜாமிஉத்தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும், பிரபல மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எச்.எம். இத்ரீஸ், இமாம் ஜமாஅத்தாக பெருநாள் தொழுகையை நடத்தியதுடன், பெருநாள் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY