
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கு மாகாண ஆளுநரால் இலவச பாடநூல், சீருடை துணிகள் வழங்கல்
2024ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோக நிகழ்வு அம்பாறையிலுள்ள மூன்று பாடசாலைகளில் இடம்பெற்றது.
அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் சீருடை துணிகளையும் வழங்கி வைத்தார்.
அம்பாறை காமினி வித்தியாலயம், அம்பாறை சத்தாதிஸ்ஸ மகா வித்தியாலயம் மற்றும் பண்டாரநாயக தேசிய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கோட்ட கல்வி பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)