காலத்தின் தேவை  வாழ்க்கை தரம் உயர்வதே - காதர் மஸ்தான்

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை சீராகி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதே காலத்தின் தேவையாகும். அமைச்சு பொறுப்புக்களுக்கு அப்பால் நாம் கடின உழைப்பின் பக்கம் செல்ல வேண்டிய தருணம் எம் அனைவர் மீதும் உணரப்பட்டுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

தனது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

அமைச்சு பொறுப்புக்கள் அதிகாரங்களுடனான சுகபோகங்களை அனுபவிப்பதற்கு அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எம்மை மீது சுமத்தப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு இதய சுத்தியுடன் உழைக்கும் உன்னத பொறுப்பேயாகும். இதனை நாம் கடமை உணர்வுடன் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. அமைச்சு பொறுப்புக்களையும் அதிகார சுகபோகங்களையும் விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டுமென இந்த இடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவதாக காதர் மஸ்தான் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

காலத்தின் தேவை  வாழ்க்கை தரம் உயர்வதே - காதர் மஸ்தான்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More