காங்கேசன்துறையில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய சனிக்கிழமை (03) தினம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் காங்கேசன்துறை, தெல்லிப்பழை பொலிசாரினால், பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடமையில் உள்ள பொலிசார் மற்றும் ஓய்வு பெற்ற பொலிசார் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கொட்டாச்சி, தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவசிறி மற்றும், இந்த நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலி அத்தியட்சகர் பண்டார அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் கடமையினை சரியாக முன்னெடுத்து குற்றங்களை தடுத்த போலீசாருக்கு பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , கிராம சேவையாளர் சமுக செயற்பாட்டாளர் என்ன பலரும் கலந்து கொண்டனர்

காங்கேசன்துறையில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)