
posted 2nd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கவிதை தொகுதி வெளியீடு
நாச்சியாதீவு பர்வீனின் நான்காவது கவிதைத் தொகுதியான “தெருப்பாடகன்“ மள்வானை அல் முபாறக் கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் நடந்தேறியது.
கவிஞர் அல் அஸூமத் அவர்களின் தலைமையில் நடந்த இந்த விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ.மு.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக நாளிர் முகம்மத் கலந்து கொண்டார்.
நூல் அறிமுக உரையை சிரேட்ட ஊடகவியலாளர் எம்.ஏ. நிலாம் நிகழ்த்த நூல் பற்றியும் கவிஞர் பற்றியதுமாக உரைகளை அஷஷெயக் பிஸ்தாமி அகமட், கலாநிதி எம்.சி. ரஸ்மின், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்தினர்.
கவிஞர் கிண்ணியா அமீர் அலி, கவிஞர் ரவூப் ஹஸீர் ஆகியோர் கவிதை வாழ்த்துப் பாடினர். முதற் பிரதியை ஊடகவியலாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி பெற்றுக் கொண்டார்.
இலக்கியச் செயற்பாடுகள் குறித்த மற்றொரு உரையை முன்னாள் நீதியரசர் அப்துல் கபூர் அவர்கள் நிகழ்த்தினார்.
பர்வீனின் கவிதை வளர்ச்சியில் “தெருப்பாடகன்” ஒரு மைல் கல்லாக அமைந்திருப்பதை உரையாளர்கள் சுட்டிக் காட்டினார்கள். அண்மைக் காலத்தில் பர்வீன் எழுதிய 27 கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
கவிஞர் நஜ்முல் ஹூஸைன், கலைஞர் எம்.எஸ். எம். ஜின்னா, எழுத்தாளர் எம்.ஏ. ரஹீமா, கல்லொளுவ பாரிஸ் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)