களவெடுத்த நகைகளைப் பணமாக்க முயல்கையில் அகப்பட்ட நபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் செவ்வாய் (311) இரவு கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் பருத்தித்துறை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

நேற்று (31) இரவு வடமராட்சி திக்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து 17 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன.

பருத்தித் துறை போலீசாரின் அதிரடி நடவடிக்கையினால் இன்று புதன் (01) பிற்பகல் நகைகளை மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் கொள்ளையிடப்பட்ட நகைகளை நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்கு முற்பட்ட வேளையே பொலீசாரல் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

இதன் போது குறித்த சந்தேக நபர் வசமிருந்த 17 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு போலீசாரால் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நடவடிக்கையில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, உப பொலீஸ் பரிசோதர்களான குமாரசிறி, விராஜ், போலீஸ் சார்ஜன்களான குமார, ஒளிவேரா, போலீஸ் காவலர்களான ஆர். திருச்செல்வம், அபயரத்தின, மதுசன், இந்திக்க, நந்தசேன, ஜெயநித்தி, மற்றும் பெண் போலீஸ் காவலர்களான ஆயிஷா, கிமானி, மதுசானி ஆகியோர் ஈடுபட்டனர்.

களவெடுத்த நகைகளைப் பணமாக்க முயல்கையில் அகப்பட்ட நபர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More