
posted 12th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கள விஜயம் மேற்கொண்ட வடமேல் மாகாண ஆளுநர்
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தெலியாகொன்ன பிரதேசத்திக்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் மிக நீண்ட கால பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அப்பிரதேசத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் ஒரு பொது விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தினாலும், அவற்றை அமைத்துத்தருமாறும் இதனால், இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காகவும் மேலும் இப்பகுதியில் 10000த்திக்கு அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள்.
மேலும், இங்கு ஒரு பிரதான பாடசாலை மற்றும் ஏழு சாதாரண பாடசாலைகள் அமைந்துள்ளது எனவும் ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் கவனத்திக்கு இப்பிரதேச மக்கள் கொண்டு வந்ததுடன் இப்பிரதேச மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர் உடனடியாக பொது மைதானத்தை அமைத்து தருவதாக ஏனைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)