கல்முனையில் 100 சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்வு

“எத்தகைய விமர்சனங்கள் வரினும் கிழக்கில் எமது பணி நீதி, நேர்மையுடன் தொடரும், விமர்சனங்களும் வீணான எள்ளி நகையாடல்களும் எம்பணியில் உத்வேகத்தையே தந்துள்ளன.”

இவ்வாறு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் கூறினார்.

கல்முனையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் “கிழக்கின் 100 சிறுகதைகள்” தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். அபூபக்கர் ரமீஸ் பிரதம விருந்தினராகவும்,

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா.முரளீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நூலின் அறிமுக மற்றும் தொகுப்புரையை சிவ.வரதராஜனும், திணைக்களத்தின் நூல் வெளியீடுகள் மற்றும் மதிப்பீட்டுரையை தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர். ரமீஸ் அப்துல்லாவும் ஆற்றினார்.

பணிப்பாளர் நவநீதன் தமது தலைமையுரையில் மேலும் பின்வருமாறு கூறினார்.

“எமது இன்றைய கிழக்கின் 100 சிறுகதைகள் நூல் வெளியீடு எமது திணைக்களத்தின் பணிகள் தொடர்பான பாதையில் மைல்கல்லாகும்.

ஆனாலும் கடந்த ஒருவாரகாலமாக முகப்புத்தக்கங்களில் பல்வேறு கருத்தோட்டங்கள் இந்நூல் பற்றி எழுதப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு நாம் சிறுகதைகளை இருட்டறையிலிருந்து கோரவில்லை.

இலங்கையின் தேசியப்பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், எமது கிழக்கு மாகாண சபை இணையத்தளத்திலும் விளம்பரம் செய்து முறைப்படி சிறுகதைகளைக் கோரினோம், சமூக ஊடகங்களிலும் விளம்பரம் செய்தோம்.

இதனால் 784 சிறுகதைகள் கிடைக்கப் பெற்ற அதேவேளை 54 சிறுகதைகள் ஈமெயில் மூலமும் கிடைத்து மிகக் கவனமாகச் சிறந்த நல்ல சிறுகதைகளைத் தெரிவு செய்து தொகுப்பாக நூலை வெளியிட்டோம்.

இதற்கென இயங்கிய சிறந்த குழுபெரும் சிரத்தையுடன் செயற்பட்டது இருப்பினும் இந்த நூல் மூலம் நற்பெயரும், பாராட்டும் கிடைத்தால் அதனை குழுவின் சகலரும் பகிரந்து கொள்வோம்.

ஆனால் விமர்சனங்களையும், பின்னடைவுகளையும் நான் மட்டுமே சுமந்து கொள்வேன். ஆனாலும் எமது இப்பணி தடங்கலின்றி தொடரும்” என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பலரும், நூலின் தொகுப்பாசிரியரும், பிரபல எழுத்தாளருமான உமாவரதராஜனையும், பணிப்பாளர் நவநீதனையும் வெகுவாகப் பாராட்டினர்

கல்முனையில் 100 சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House