கல்முனை மாநகர சபையை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக, மாலை, ஒரு தொகுதி மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் கே.எம். றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே. ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் எம். உதயகுமரன், நிர்வாக உத்தியோகத்தர் எம். அப்துர் ரஹீம், உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம். நௌஷாட், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. அஹத், வருமான பரிசோதகர்களான சமீம் அப்துல் ஜப்பார், கே. குணரட்னம், புவனேந்திர ராஜா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் வி. சுகுமார் உட்பட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்தை முழுமையாக அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இன்னும் பல மரக்கன்றுகள் நடப்படவுள்ளதுடன் மற்றும் சில பணிகளும் முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபையை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More