
posted 6th January 2023
'வாழும்போதே வாழ்த்துவோம்' என்ற எண்ணக்கருவில் சங்கவி தியேட்டர் மற்றும் சங்கவி பிலிம்ஸ் கம்பனி கடந்த மூன்று வருடங்களாக தலா நூறு கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உலகத் தமிழர் விருதாக விளங்கும் 'கலாவிபூஷணம்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான்காவது தடவையாகவும் 2023 ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
கடந்த வருடங்களில் தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனையில் கொழும்பில் நடைபெற்று வந்த இவ்விழாவானது இவ்வருடமும் தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனையில் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 134 கலைஞர்களுக்கு 'கலாவிபூஷணம்' என்ற விருது
மன்னார் மாவட்டத்தில் பேசாலை சங்கவி தியேட்டர் மண்டபத்தில் 25.02.2023 அன்று இக் கௌரவிப்பு விழா இடம்பெற இருக்கின்றது.
சங்கவி தியேட்டர் மற்றும் சங்கவி பிலிம்ஸ் கம்பனி பணிப்பாளர் திரு. துறைராசா சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர் தலைமையில் இவ் விழா இடம்பெற இருக்கின்றது.
இக் 'கலாவிபூஷணம்' பெற இருக்கும் கலைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)