கலாபூஷணம் மீரா இஸடீன் மீண்டும் தலைவராகத் தெரிவு!

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கலாபூஷணம் மீரா இஸடீன் மீண்டும் தலைவராகத் தெரிவு!

அம்பாறை மாவட்ட உடகவியலாளர் சம்மேளனத்தின் (யுனுதுகு) வருடாந்த ஒன்று கூடலும் வருடாந்த பொதுக் கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா. எஸ். இஸடீனின் தற்காலிக தலைமையிலும், செயலாளர் ஏ.ஜே.எம். ஹனிபாவின் நெறிப்படுத்தலிலும், ஒலுவில் இஸ்மாயில் ஹாஜியார் (அஸீஸ்) தோட்டமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் முதன்மைமிக்க ஊடக அமைப்பான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயற்பாடுகளை புதிய உத்வேகத்துடனும், வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் நிகழ்வில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது மீண்டும் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ் இஸடீன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இத்தெரிவு மூலம் அவர் சம்மேளனத்தின் ஆயுட் காலத் தலைவராக செயற்படுவாரெனவும், உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானமாகவும் அறிவிக்கப்பட்டது.

தலைவர் மீரா இஸடீன் சுகயீனம் காரணமாக ஒரு சில வருடங்கள் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருந்த காலகட்டத்தில் சம்மேளனத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த தொய்வு நிலை குறித்து உறுப்பினர்கள் பலரும் கூடத்தில் கவலை வெளியிட்டனர்.

கடந்த 22 வருடங்களுக்கு மேல் மேற்படி சம்மேளனத்தின் ஆளுமையும், செயற்திறனும் மிக்க தலைவராக செயற்பட்டுவரும், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸடீன்,கிழக்கில் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்சார் பல்வேறு வேலைத் திட்டங்களை சம்மேளனம் மூலம் முன்னெடுத்து வந்ததுடன், தேசிய மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் பல முக்கியத்துவமிக்க நிகழ்வுகளையும் தமது அயராப் பெரு முயற்சியில் சிறப்புற நடத்தினார். கிழக்கிலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் ஊடகத்துறை ஐம்பது ஆண்டுகள் நிறைவு விழாவை சம்மேளனம் சார்பில் பெருவிழாவாக நடத்தியதுடன், “பொன் விழாக்காணும் சலீம்” எனும் சிறப்பு மலரொன்றையும் வெளியிட்டமையும் அவரது ஆளுமை செயற்திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.

பிராந்திய ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்த பெரும் ஆளுமையான கலாபூஷணம் மீரா எஸ். இஸடீன் மீண்டும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்மேளனத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.ஏ. சமட், பொருளாளராக இஸட். ஏ.எம். றகுமான் ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்;டனர்.

அத்துடன் சம்மேளன சிரேஷ்ட ஆலோசகர்களாக கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம், எஸ். சிறாஜுடீன், எம்.ஐ.எம். சம்சுடீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலாபூஷணம் மீரா இஸடீன் மீண்டும் தலைவராகத் தெரிவு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More