கலந்துரையாடல்

கண்டி, மாத்தளை மாவட்டங்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குமிடையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்த கலந்துரையாடல் கண்டி நகரில் நடைபெற்றது.

அதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து போட்டியிடுவதானால், போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் போதிய வட்டார மற்றும் ஆசன ஒதுக்கீடுகள் என்பவற்றைப் பொறுத்து, அக் கட்சியின் தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு ஏற்பட்டால் மட்டுமே அவ்வாறு சாத்தியமாகும் என்றும், அல்லாத பட்சத்தில் அந்த மாவட்டங்களின் எல்லா உள்ளூராட்சி மன்றங்களிலும் கட்சி பெரும்பாலும் தனித்தும்

துயர் பகிர்வோம்

சிலவற்றில் வேறு கட்சிகளுடன் சேர்ந்தும் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வட கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், வட கிழக்கைச் சேர்ந்த மாவட்டங்களில் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)