கருங்கல்லால் கடலரிப்புத் தடுப்பு - மும்முரமான செயலில் இறங்கினார் பைசால் காசிம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பினை தடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிந்தவூர் பிரதேசத்தின் 9 ஆம் பிரிவு பகுதியில் மிக மோசமான பாதிப்பு இக்கடலரிப்பினால் ஏற்பட்டுள்ளது.

இந்த கடலரிப்பு அனர்த்தம் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். பைசால் காசிம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இதன் பயனாக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் உடனடியாக செயலில் இறங்கி மிக மோகசமாக கடலரிப்பிற்குள்ளான சுமார் 150 மீற்றர் பிரதேசங்களிற்கு முதற்கட்டமாக கருங்கல் இடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் 9ஆம் பிரிவில் மிக மோசமான கடலரிப்பிற்கு உள்ளான பகுதிகளில் கருங்கற்கள் போடப்படும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஒலுவில் துறைமுக நிர்மான வேலைகள் காரணமாக அயல் பிரதேசமான நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு அனர்த்தத்தை தடுப்பதற்கு நிரந்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை இக்கடலரிப்புக் காரணமாக கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடல் மீன்பிடியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

கருங்கல்லால் கடலரிப்புத் தடுப்பு - மும்முரமான செயலில் இறங்கினார் பைசால் காசிம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More