
posted 25th May 2022
கொரோனா அச்சம் காரணமாக கடந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2021 ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இடம் பெற்றுவருகின்றது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை பரீட்சாத்திகள் ஆலய தரிசனங்களின் பின் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று சகல மாணவர்களும் பாடசாலைக்கு உற்சாகமாக வருகை தந்து பரீட்சைக்கு தோற்றியதை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்காக 14 இணைப்பு நிலையங்களும், 125 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், இப்பரீட்சைக்கு மாவட்டத்தில் இருந்து 17,416 மாணவர்கள் தோற்றியுற்றதாக பரீட்சைக்காக ஒன்று சேர்க்கும் நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய இணைப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY