
posted 24th May 2022
கனடிய பாராளுமன்றத்தில் மே 18ஆனது இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்கின்ற தினமாக அங்கிகரித்தது போன்று எமது பகுதியிலும் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் இந் நாளை இனப்படுகொலை தினமாக அங்கிகரிக்கும் தீர்மானங்களை கொண்டுவர வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
திங்கள் கிழமை (23.05.2022) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னாரிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியபோது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
கனடிய நாட்டின் பாராளுமன்றத்திலே மே மாதம் 18ந் திகதி அன்று இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்கின்ற தினமாக அந்த பாராளுமன்றம் அங்கிகரித்துள்ளது.
ஹரி ஆந்தசங்கரி அவர்கள் இந்த விடயத்தில் முனைப்பு காட்டியுள்ளார் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இவ்வாறான செயல்பாடானது எமது நாட்டிலுள்ள பிரதேச சபைகள் நகர சபைகள் யாவற்றிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நான் இந்த கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கின்றேன்.
கனடிய நாட்டில் இதற்காக உழைத்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
அடுத்ததாக நேற்றைய முன்தினம் (22.05.2022) தமிழ்நாட்டு உறவுகள் எங்களுடைய இலங்கை மக்களுக்கு அதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் உற்சாகம் நிறைந்த முறையிலே எமது இலங்கை மக்கள் பட்டினி கிடக்கக்கூடாது என அரிசி பால்மா மருந்து போன்றவைகளை அன்பளிப்பாக வழங்கியமைக்காக நாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
உண்மையில் தொப்பில்கொடி உறவு என்பது எமது பிறச்சனைகளை கண்டு அவர்கள் துடிப்பதை நாம் காண்கின்றோம்.
ஒரு சிறுமி தான் சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை எங்கள் மக்களுக்காக அவற்றை ஒப்படைத்துள்ளார்.
அவ்வாறு ஒரு தேனீர் வியாபாரி தனது தேனீர் கடையிலே இருந்து கொண்டு எமது மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
இவ்வாறு யாசகர் ஐயா ஒருவர் தான் நாளாந்தம் சேகரித்த பணத்தை எமது மக்களுக்காக கையளித்துள்ளார்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். இவ்வாறுதான் எமது தமிழ்நாட்டு மக்களின் நிலை இருந்த வருகின்றது.
ஆகவே, எமக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் இரு நாட்டு மக்களுமாகிய நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது ஒன்றுபட்டு வாழ முனைய வேண்டும் என்பது எனது அவா.
தமிழ்நாட்டு மக்கள் நமக்கு செய்யும் உதவிகளை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
இயக்கங்கள் வளர்ச்சி அடைந்த காலங்களிலும், தற்பொழுது அகதி முகாம்களில் இருக்கின்ற இன்றைய சூழல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் எம்மை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு சட்டசபை எதிர்கட்சி உறுப்பினர்களும் யாவரும் ஒன்றினைந்து எமது மக்களுக்கு உதவி செய்திருப்பது நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் எனது கட்சி சார்பாகவும் நான் முதலமைச்சர் ஸ்ரான்லி அவர்களுக்கும் அவரைச் சார்ந்த யாவருக்கும் மக்களுக்கும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY