கதைமாமணி  காலமானார்!

இலங்கையின் சிறுவர்களுக்கு உணர்வு பூர்வமாகக் கதைகளைக் கூறி அவர்களை மகிழ்வூட்டும் தன்மை கொண்டவரும், மட்டக்களப்பின் கலைப் பொக்கிஷமாகவும் கருதப்படும் கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கம் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த இவர், கலைஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களை மகிழ்வூட்டுவதற்காகவே செயற்பட்டார். இவர் கதை கூறும் பொழுது அந்தப் பாத்திரமாகவே மாறி உரையாடுவதும், அவ்வப்போது நகைச்சுவைச் சிதறல்களை அள்ளி வீசுவதும் அவருக்கே உரித்தான விஷேட பண்பாகும். இவர் இதுவரை சுமார் 8 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதோடு, கலாபூஷணம், நகைச்சுவை மன்னன், நகைச்சுவை ரன், வில்லிசை வேந்தன், கதைக் கொண்டல், இலக்கிய முதுமாணி, கதைமாமணி, பல்கலைக் கலைஞன், நடிக மன்னன் போன்ற பல உயர் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஊடகத்துறை ஜாம்பவான் அமரர் எஸ்.டி. சிவநாயகத்துடன் பிரபலமான தினபதி சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் பல வருடங்கள் கடமையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் இவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 4.00 மணிக்கு கல்லடி உப்போடை பொது மயானத்தில் இடம்பெற்றது.

கதைமாமணி  காலமானார்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House