கதிர்காம பக்தர்கள் பாத யாத்திரை

இலங்கையில் வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்மாமம் ஆடிவேல் விழா உற்சவத்திற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக, கதிர்காமம் நோக்கி பக்திப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கூடாக தொடரும் இந்த பாதயாத்திரீகர்கள், உகந்தை முருகன் ஆலயத்தiயும் தரிசித்து பின்னர் அங்கிருந்து காட்டுபாதை யூடாக கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.
கடந்த சில வருடங்களாக கொவிட் பரவல் காரணமாக கதிர்காமம் உற்சவத்திற்கான பாதயாத்திரைகளையிழந்திருந்த போதிலும் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள பாதயாத்திரையாகவும் வருகை தருவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுடாக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதயாத்திரையாக பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவபாதயாத்திரைக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்ட விருப்பதாக கதிர்காமம் கந்தன் ஆலய பஸநாயக்க நிலமே திஷான் குணசேகர அறிவித்துள்ளதுடன், ஜுலை 22 இல் திறக்கப்படும் காட்டுப்பாதை ஆகஸ்ட் 5 ஆம் திகதி மீண்டும் பூட்டப்படுமெனவும், இக்காலப்பகுதிக்குள் கதிர்காமம் வந்துசேரலாமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குமண மற்றும் யால வனப்பூங்காக்கள் ஜுலை 22 முதல் ஆகஸ்ட் 5 வரை திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் தேவாலயத்தின் எசல திருவிழா ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுமெனவும் தெரியவருகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பித்த பிரதான பாதயாத்திரைக் குழுவினர் கிழக்கு மாகாணத்தை வந்தடைந்து தமது பாதயாத்திரையை தற்சமயம் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையிலேயே மேலும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும், தனியாகவும், குழுவாகவும் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

கதிர்காம பக்தர்கள் பாத யாத்திரை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY