
posted 27th May 2022
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்டுவரும் கடலரிப்பு காரணமாக மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் இப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடல் பெருக்கத்துடன் கடல் சீற்றமும் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மானம் என்ற நோக்கில், மீன்பிடித் துறைமுக நிர்மாணமே இடம்பெற்றதால் இந்த கடலரிப்பு அனர்த்த நிலைமை ஒலுவிலை அண்மித்த ஏனைய அயல் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மாட்டுப்பளை, அட்டப்பள்ளம், நிந்தவூர்ப் பிரதேசங்கள் மிக மோசமான கடலரிப்பு பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன.
அண்மைய சில நாட்களாக நிந்தவூர்ப் பகுதியில் பெரும் கடல் சீற்றம் காரணமாக கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.
நிந்தவூர் 9ஆம் பிரிவில் கடற்கரையை அண்டியுள்ள மீனவர் கட்டிடங்கள், பொதுக் கட்டிடங்களுட்பட தென்னம் தோட்டங்களும் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்சமயம் கடலரிப்பினால் நிந்தவூர் 9 ஆம் பிரிவில் மீனவர் கட்டிடம், மற்றும் சனசமூக நிலையக் கட்டிடம் என்பன சேதமுற்று கடலால் காவுகொள்ளப்படும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடற்றொழிலாளர்களின் கரைவலைத் தோணிகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடியாளர்ளின் இயந்திரப் படகுகள் என்பவற்றை கரையில் நிறுத்தி வைக்க முடியாது பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த கடலரிப்பு அனர்த்தத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்பட்டுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அவசரமாக முன்னெடுக்க முன்வரவேண்டுமெனவும், இதுவிடயத்தில் பிரதேச அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது மக்கள் கோருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY