
posted 1st May 2022
வடமராட்சி சுப்பர்மடம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கடற்படை படகு மோதியதில் உள்ளூர் மீனவர் ஒருவரின் படகு சேதமடைந்துள்ளது.
அதில் பயணித்த இரு மீனவர்களும் எவ்வித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டனர். சுப்பர்மடம் பகுதி மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடி படகு சம்பவ தினத்தன்று மீன்பிடிக்கச் சென்றபோது கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் வந்து கொண்டிருக்கும்போது கடற்படையின் படகு வேகமாக வந்து மோதியதில் படகு சேதமடைந்தது.
மீனவர்கள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பிக் கொண்டனர் சேதமடைந்த படகையும், வலைகளையும் கடற்படையினர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தில் படகு மற்றும் வலைகள்வெளியிணைப்பு இயந்திரங்கள் சேதமடைந்தன. சுமார் 15 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY