
posted 26th November 2021
கிளிநொச்சி - பெரிய கட்டடைக்காடு பகுதியில் 208 போத்தல் கசிப்பு, மற்றும் 3000 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் அத்தியச்சகரின் உத்தரவிற்கமைய அன்றைய தினம் கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

எஸ் தில்லைநாதன்