கசிப்பு மீட்கப்பட்டது

கசிப்பு மீட்கப்பட்டது

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் 01/04 சனிக்கிழமை பிற்பகல் வரணிப் பகுதியில் வைத்து 5500மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நபரொருவர் முல்லைத்தீவு - பருத்தித்துறை பேருந்தில் கசிப்புடன் பயணித்து அதனை வரணிப் பகுதியில் வைத்து வியாபாரம் செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர் வரணிப் பகுதியில் பேருந்தால் இறங்கி நடத்து சென்ற போது கசிப்பு மீட்கப்பட்டுள்ள போதிலும் சந்தேக நபர் தப்பித்துள்ளார்.

இதன் போது முதுகுப் பை ஒன்றினுள் உடைகளால் மூடப்பட்டு மறைத்து கொண்டு வரப்பட்ட 4 கசிப்பு போத்தல்கள் மதுவரித் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

மதுவரி அத்தியட்சகர் பெரேரா மற்றும் உதவி மதுவரி ஆணையாளர் சுனில்சாந்த ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் சாவகச்சேரி மதுவரித் திணைக்கள சார்ஜன் மேஜர் வி. மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கசிப்பு மீட்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More