
posted 24th May 2022
சாய்ந்தமருது பிரதேச அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம்.ஐ.ஏ. ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், அம்பாறை மாவட்ட அரச சேவை ஓய்வூதியர்கள் நிதியத்தின் செயலாளர் ஏ. உதுமாலெப்பை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ஏ.சி.எம். பளீல், ஏ.சி. முஹம்மட், ரி. சாஜிதா ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மரணித்த நிதிய உறுப்பினர்களுக்காக மௌலவி எம்.எம். அஹமட் விசேட துஆப் பிராத்தனை நடாத்தினார்.
மேலும் நிகழ்வில் அரசசேவை ஓய்வூதியர்களின் நலன்கள் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.
இதேவேளை நிதியத்தின் தலைவராக மீண்டும் எம்.ஐ. அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY