ஐயாயிரம் ரூபா போலி நோட்டுடன் கைதான மாணவன்மாணவன்

அக்கரைப்பற்றில் அப்பிள் கடை ஒன்றில் ஜயாயிரம் ரூபாய் போலி நாணையத்தாளை வழங்கி அப்பில் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டதுடன் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மூன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன், அவரது நண்பனுடன் சம்பவதினமான நேற்று முன்தினம் பகல்

அக்கரைப்பற்று கல்முனை வீதியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள அப்பிள் கடைக்கு சென்று அப்பிளை வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துள்ளார்.

கடை உரிமையாளர் இது போலியான தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிப்பிடித்து பொலிஸாரி்ம் ஒப்படைத்தார். அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்தனர்

இதில், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து மேலும் இரண்டு 5 ஆயிரம் ரூபாய் போலித் தாள்கள் மீட்கப்பட்டன.
விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐயாயிரம் ரூபா போலி நோட்டுடன் கைதான மாணவன்மாணவன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More