ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில்  இன்று அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்திய மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று (31) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் தி. சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஊடகர் அமரர் ஐயாத்துரை நடேசனின் உருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர், ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட்டு, அவர்கள் தமது ஊடகப் பணியைத் தங்கு தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் வழிசமைக்க வேண்டும். அத்தோடு ஊடகர் ஐயாத்துரை நடேசன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர்.

ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில்  இன்று அனுஷ்டிப்பு!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY