ஐயப்பன் ஆலயத்துக்குள் சடலம்

ஐயப்பன் ஆலயத்துக்குள் சடலம்

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்குள் சடலம் ஒன்று நேற்றுக் (07) காலை பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது.

43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசிங்கம் என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டார்.
பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


பூசகரின் பணப்பை அபேஸ்

தென்மராட்சி - மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றுக்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்துக்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும்.

இவ்வாறு பூசையில் ஈடுபடும் ஆலயத்தின் நாளாந்த வருமானமும் மாத வேதனமாக 25 ஆயிரத்தையும் தனது பையில் வைத்துக்கொண்டு மீசாலை பிள்ளையார் ஆலயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலயத் திறப்பை எடுத்த சமயம் இளைஞர்கள் இருவர் கைப் பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.

இது தொடர்பில் பூசகர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கட்டுதுவக்கு வெடித்ததில் ஆபத்தான நிலையில் ஒருவர் அனுமதி

கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு J/434 கிராம சேவகர் பிரிவில், பாலைப்பழம் பிடுங்க சென்ற ஒருவருக்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்டிருந்த பொறி வெடியான கட்டுத்துவக்கு வெடித்து தொடைப்பகுதியில் காயம் ஏற்படுத்திய நிலையில் அவர் கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வெள்ளிக்கிழமை (06) நண்பகலில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் போக்கறுப்பு J/434 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஜோசப் மைக்கல் வலண்டன் எனும் 38 வயதுடைய நபரே படுகாயமடைந்தவராவர்
இது தொடர்பான மேலதிக, விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கண்டு வருகின்றனர்.

முன் அறிவித்தலின்றி மின் துண்டிப்பு - மனித உரிமைகளிடம் முறைப்பாடு

எந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் துண்டித்துள்ளதாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சாரத்தினை கடந்த புதன்கிழமை மின்சார சபையினர் துண்டித்துள்ளனர்.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைக்காக எம்முடைய வீட்டினை ஒருவரிடம் பொறுப்பாக வைத்து , அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டோம்.

எண்களின் வீட்டினை பொறுப்பாக வாங்கிக்கொண்டு பணத்தினை கொடுத்த நபர் , தற்போது எங்களிடம் இருந்து பணத்தினை வாங்காது , வீட்டினை முழுமையாக கையகப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று , எம்மை மிரட்டி , எமது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்று இருந்தனர். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் வழங்கி இருந்தோம். அது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அது தொடர்பில் பொலிசாரிடம் வினாவிய போது , விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறி வருகின்றனர்.

எமக்கு அவர்களினால் அச்சுறுத்தல்கள் இருப்பதனால் எமது வீட்டுக்கு பாதுகாப்பு கமராக்களை தற்போது பொறுத்தியுள்ளோம்.

இந்த நிலையிலையே கடந்த புதன்கிழமை மின்சார சபையினரால் எமது வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மின்சார சபையினரிடம் கேட்ட போது, எமக்கு பணம் தந்தவர் தனது பொறுப்பிலையே வீடு உள்ளதாகவும், அந்த வீட்டிற்கு மின் இணைப்பு தேவையில்லை என கூறியதால் தாம் மின் இணைப்பை துண்டித்ததாக எமக்கு கூறினார்கள்.

ஆனால் இன்று வரை எமது பெயரிலையே மின் பட்டியல் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, அது தொடர்பில் எம்மிடம் கேட்காது எவ்வாறு மின்சாரத்தை துண்டித்தீர்கள் என கேட்டதற்கு, பதில் அளிக்காமல், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஊடாக எம்மை வெளியில் அனுப்பினார்கள்.

தற்போது எமது வீட்டுக்கு மின்சாரம் இல்லாமையால், குழந்தையுடன் வாழும் நாம் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.

அதேவேளை எமது பாதுகாப்புக்காக பொருத்திய பாதுகாப்பு கமராக்கள் மின்சாரம் இல்லாமையால், செயற்படாமல் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எமது குடும்பத்தினருக்கு ஏதுனும் ஆபத்து விளைவிக்க கூடும் என அச்சமும் தெரிவித்தார்.

ஐயப்பன் ஆலயத்துக்குள் சடலம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY