எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பிய வங்கி ஊழியர்கள்

எரிபொருள் நிலையத்தில் சேமிப்பு வங்கி ஊழியர்கள் குளப்பம் விளைவித்து எரிபொருளைப் பெற்றார்கள்
நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் எரிபொருளை பெற்றதாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் பலர் காத்திருந்தனர்.

நேற்று பிற்பகல் புதன்கிழமை 4.30 மணியளவில் வரிசையின் இறுதியில் காத்திருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி எரிபொருள் பெற்றுச் சென்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுங்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களும், அரசாங்க ஊழியர்களும் வாக்குவாத்த்தில் ஈடுபட்ட போதிலும், எதையும் பொருட்படுத்தாமல் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இன்நிலையில் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையின்றி சென்றதைக் கண்டு, பின் வரிசையில் நின்ற ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்களும் வரிசையைக் குழப்பி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி முழுத் தாங்கியை நிரப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களின் இத்தகைய செயற்பாடனாது வரிசையில் நின்ற ஏனைய அரசு ஊழியர்களை முகம் சுலிக்க வைப்பதாக எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த அரச உத்தியோகத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பிய வங்கி ஊழியர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More