எரிபொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையில்லையேல் சட்டம் தண்டிக்கும்

மன்னாரில் எரிபொருட்களை வெளிச்சந்தையில் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது தடைசெய்யப்படும். இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்டும். இது எச்சரிக்கையாக அல்ல மாறாக மன்னார் மக்கள் பொருளாதார பிரச்சனையிலும் கட்டப்பாட்டு விலையில் எரிபொருட்களை பெறும் நோக்குடனே இது முன்னெடுக்கப்பட இரக்கின்றது என மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.துலசன் நாகவத்த இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் குடும்பத்தினர் எரிபொருள் பெறுவதிலுள்ள சிரமங்களை தவிர்த்து மன்னாருக்கு வரும் எரிபொருட்களை யாவருக்கும் சமமாக பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கையாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் திங்கள் கிழமை (09.05.2022) இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

இதன்போது மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.துலசன் நாகவத்த இக்கூட்டத்தில் கருத்த தெரிவிக்கையில்

இலங்கையில் பல இடங்களிலும் எரிபொருள் பெறுவதற்காக பலரும் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெறுவதை நாம் பார்க்கின்றோம்.
ஆனால் இந்த நிலை மன்னார் மாவட்டத்தில் அவ்வாறான மோசமான நிலைமை உருவாகாமல் இருந்து வருகிறது என்பதும் எமக்கு தெரியும்
இதற்கு முக்கிய காரணம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் விடா முயற்சியின் காரணமாகவே இந்த நிலைமை தொடர்ந்து வருகின்றது

ஆனால் அப்படி இருந்தும் தற்பொழுது இங்கு முக்கியம் தேவையானவர்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் வெளிச் சந்தையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக இங்கு மாத்திரமல்ல வெளியிடங்களில் இருந்து பல முறைப்பாடுகள் எமக்கு வந்திருக்கின்றன

ஆகவே இது தொடர்பாகவே இவ் கூட்த்தை நாம் நடாத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. தேவையானவர்கள் எரிபொருள் நிலையத்தில் தங்களுக்கு எரிபொருள் பெற மடியாத நிலையில் இருக்கும்போது வெளிச் சந்தைகளில் தங்களுக்கு கூடிய விலைக்கு எரிபொருள் பெற்று வருவதாகவும் எமக்கு தெரிய வந்துள்ளது.

ஆகவே எரிபொருள் பெற்று வெளிச் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பதை தடைசெய்து சகலரும் கட்டுப்பாட்டு விலையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன் நிமித்தம் மன்னார் மாவட்டத்தில் எத்தனை சங்கங்கள் இருக்கின்றன இவர்களுக்கு எத்தனை படகுகள் இருக்கின்றன சங்கங்களில் ஊடாக எத்தனை லீற்றர் எரிபொருள் வழங்கலாம் என்பதை கணக்கீடு செய்து வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது

சிலர் எரிபொருட்களைப் பெற்று வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதும் இனிமேல் தடை செய்யப்படும்
எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வந்ததும் பொலிசாரின் முன்னிலையிலேயே இவ் எரிபொருள் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்க்பட்டுள்ளது.

ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் தலா இரண்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவர்.

மீனவர் சங்கங்களினூடாக அரசாங்க அதிபர் அவர்களுடைய அனுமதியுடன் எரிபொருட்களை கொண்டு செல்வது மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது

அதற்கு மேலான எரிபொருளைக் கொண்டு சென்றால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

இது எச்சரிக்கையாக அல்ல மன்னர் மாவட்டத்தில் சுமுகமான முறையில் யாவருக்கும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகவும் வெளிச் சந்தைகளில் கூடுதலான விலைக்கு விற்கப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலையில்லையேல் சட்டம் தண்டிக்கும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More