எம். ஜி. ஆரின் 100ஆவது பிறந்த தினம்

தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனின் நூற்று ஆறாவது பிறந்த தினம் நேற்று (17) செவ்வாய் பிற்பகல் 3.15 மணிக்கு யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் அமரர் சுந்தரலிங்கம் அமைத்த எம். ஜி. ஆர் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது.

எம். ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் தீப ஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தி வெகு சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

யாழ். எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் அமரர் சுந்தரலிங்கத்தின் துணைவியார் திருமதி இலட்சுமியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா எம். ஜி. ஆர். ரசிகர்கள் கல்வியங்காடு மக்கள் எனப் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது, எம். ஜி. ஆர். பிறந்தநாளில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

எம். ஜி. ஆரின் 100ஆவது பிறந்த தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)