எமக்கு சுந்தரநாதன் அதிபர் தான் தேவை - கல்விச் சமூகம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இடமாற்றம் பெற்று செல்ல இருந்த அதிபரை வெளியேற விடாமல் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ள காயான்மடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றிருக்கிறது.

அப்பாடசாலையின் அதிபர் வைரமுத்து சுந்தரநாதன் நேற்று முன்தினம் முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார் .
அதனை முன்னிட்டு அவர் பாடசாலையில் இருந்து சிரேஷ்ட ஆசிரியரிடம் கடமை பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேற முயற்சித்தபொழுது அங்குள்ள கல்விச் சமூகம் அவரை செல்லவிடாமல் தடுத்தது.

"எமக்கு சுந்தரநாதன் அதிபர் தான் தேவை. அவரை விடமாட்டோம்" என்று அந்த கல்விச் சமூகம் ஒரு சில மணி நேரம் பாடசாலை பிரதான வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்தது.

இதனை அறிந்த மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். மகேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் ஸ்தலத்துக்கு விரைந்து பொதுமக்களோடு கலந்துரையாடினர்.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற அந்த கலந்துரையாடலில் விரைவில் ஒரு நிரந்தர அதிபரை நியமித்து தருவதாக உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

அதன் பின்பு அதிபர் வை. சுந்தரநாதனை விடுவித்து புதிய பாடசாலைக்குச் செல்ல அனுமதித்தார்கள்.

எமக்கு சுந்தரநாதன் அதிபர் தான் தேவை - கல்விச் சமூகம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)