எப்போது ஓயுமோ?

இலங்கையை ஆட்கொண்டுள்ள கியூவரிசையுகம் எப்போதுதான் ஓயுமோவென பொதுமக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலமைகள் படு பாதாளம் நோக்கி சென்றுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் மக்களை பெரும் சிரமங்களுக்குள்ளாக்கி, இயல்பு வாழ்க்கையையும் பாதிப்படையச் செய்துள்ளது.

இந்த நிலமையின் காரணமாகவே நாட்டில் கியூவரிசையுகம் இன்னும் ஓயாது தொடர்ந்த வண்ணமுள்ளது.

பால்மாவு பெறுவதற்கு ஆரம்பமான கியூவரிசையுகம், எரிவாயு சிலிண்டர்களைப் பெறவும் நகர்ந்து தற்சமயம் எரிபொருட்களுக்கான கியூவரிசை யுகமாக பல நாட்களாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்த வண்ணமுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல மூடிக்காணப்பட்ட போதிலும், எரிபொருள் கிடைக்கப்பெறும் நிரப்பு நிலையங்களை அண்மித்து சுமார் ஒரு மைல் தூரம் வரையும் மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட கியூ வரிசைகளில் காத்து நிற்கும் அவலமும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிலமை வழமைக்குத்திரும்புமென பல்லவிபாடிவருகின்ற போதிலும் மக்களை வதைக்கும் எரிபொருளுக்கான கியூவரிசை யுகம் ஓய்ந்தபாடாகவே இல்லை.

எப்போதுதான் இந்த கியூ வரிசையுகம் ஓயுமோவெனப் பலரும் தொடர்தேர்ச்சியாக அங்கலாய்த்த வண்ணமேயுள்ளனர்.

எப்போது ஓயுமோ?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More