
posted 23rd May 2022

மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகர்த்த நிகழ்வும் “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” எனும் கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீடும் மட்டக்களப்பில் இடம்பெறவிருக்கின்றது.
மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 31 ஆம் திகதி நினைவு கூரப்பட்டவுள்ள நிலையில்,
அதனை முன்னிட்டு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த நிகழ்வும், “ஊடகர் ஜீ. நடெசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூலின் வெளியீடும்எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மடடக்களப்பில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் இ.தேவ அதிரன் தலைமையில், மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 29 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் போது ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் நடேசனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவுச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், மௌன அஞ்சலியும் இடம்பெறும்.
தொடர்ந்து, கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சிவராம் ஞாபகர்த்த (சுவிஸ்) மன்றமும் இணைந்து வெளியிடவுள்ள “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் வரவேற்புரையை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய உப தலைவர் க. ஜெகதீஸ்வரனும், தலைமையுரையை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ. பாக்கிய ராஜாவும் நிகழ்த்துவதுடன், நூல் வெளியீட்டுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் இ. தேவ அதிரனும் நிகழ்த்தவுள்ளார்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூரணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களினால் குறித்த “ஊடகர் ஜீ. நடேசன் நினைவலைகள்” நூல், நிகழ்வின் போது வெளியிட்டுவைக்கப்படவுள்ளதுடன், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அ. நிக்ஸன் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவருமான இரா. துரைரெத்தினம் ஆகிய இருவராலும் மறைந்த ஊடகர் ஜீ. நடேசன் பற்றிய சிறப்பு நினைவுப் பகிர்வு உரைகளும் இடம்பெறவுள்ளன.
குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர். நடேசனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள், நெருக்கமானவர்கள் எனப்பலரும் தமது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடேசனின் 17 ஆவது ஞாபகர்த்த தினத்தில் இந்த நூல் வெளியிடவென உத்தேசிக்கப்பட்டிருந்த போதும் நாட்டின் கொவிட் பரவல் சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் இவ்வருடம் வெளியிடப்படுவதாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ. தேவஅதிரன் தெரிவித்தார்.
இதேவேளை இந்நிகழ்வில் அனைத்து உடகவியலாளர்களையும் சமூக நலன் விரும்பிகள், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களையும் கலந்து கொள்ளுமாறு ஒன்றியத்தின் செயலாளர் வ. சக்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY