உள்ளூராட்சி மன்றங்களில் பல வேலைகள் முடக்கம் விளக்குகிறார் தவிசாளர்

உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செய்வதற்கான விலை மதிப்பீட்டை மாகாண சபை இதுவரை கிடைக்கப் பெறாமையால் வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.ச.அரியகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட j400 அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீட்டுத் தோட்டத்திற்கான நாற்றுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு அத்தியாவசியமான வேலைகள் செய்ய வேண்டி உள்ளதாகவும், மாகாண சபை குறித்த விலை மதிப்பு இல்லாமல் செய்ய முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், இப்போது அரசிடம் காசு நிதி இல்லை என்றும், உள்ளுராட்சி மன்றங்களிடம் போதிய நிதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டு தோட்டத்திற்கான பயிர்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (07) பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய மண்டபத்தில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் மாலைநேர கல்வித்திட்ட ஆசிரியை திருமதி அருணா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் மருத்துவர் கதிரேசு பவணந்தி, சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் முக்கியஸ்தர் திரு. பகீரதன், தீம்புனல் பத்திரிகை முகாமைத்துவப் பணிப்பாளர் சாந்தலிங்கம் வினோதன், பூவற்கரை கலைமகள் முன்பள்ளி ஆசிரியை திருமதி சசிகலா, ஆகியோர் சிறப்பு கௌரவ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கியதுடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீட்டு தோட்டத்திற்கான நாற்றுகளையும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அல்வாய் வடக்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஆச்சிரமம் கல்வித் திட்டத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் பல வேலைகள் முடக்கம் விளக்குகிறார் தவிசாளர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More