உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு - கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) அன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை வீதம் அதிகரித்து காணப்படுகின்றது. தற்கொலை தொடர்பில் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர்தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படுகின்றது. அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது சிறுவயது கர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த தற்கொலைகளில் இள வயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர். குறிப்பாக 24 வயது வரை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தனிமை, மற்றவர்களிடமிருந்து விலகி இருத்தல், உறவுகளுடனான முரண்பாடு, போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை துஷ்பிரயோகங்கள், மனநோய் பொருளாதார நெருக்கடிகளை கையாள தெரியாமை, அதாவது, எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளது. ஆனால், அதனை சரியான முறையில் கையாள தெரியாமை வேலை வாய்ப்பின்மை தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.

கடந்த ஆண்டுகளிலேயே கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையினுடைய உளநல வைத்தியர் சிவதாஸ் மற்றும் சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும் மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

சுவிஸ் நலவாழ்வு மருத்துவத்துறை நிபுணர் அமைப்பின் உறுப்பினரும், மனநிலை மருத்துவர் மற்றும் ஆலோசகர் கேம நவரஞ்சன் அவர்களது மனநல மருத்துவம் தொடர்பான நுல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கொவிட் காலத்தில் சேவையாற்றிய தாதியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் சுகந்தன், மாவட்ட பொது வைத்திய சாலையின் மனநல மருத்துவர் ம. ஜெயராசா, வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு - கிளிநொச்சி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More