
posted 30th May 2022
மறைந்த மன்னார் மறை மாவட்ட மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம் (சொர்க்கோ மாஸ்ரர்) ஐபிசி தமிழ் ஊடக அனுசரனையும் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் விளையாட்டு கழகம் 2-0 என்ற கோல்களால் யாழ்ப்பாணம் விளையாட்டு கழகத்தை வெற்றியீட்டியுள்ளது.
இச்சுற்று போட்டியானது சனிக்கிழமை (28.05.2022) ஆரம்பமாகியது. இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) இடம்பெற்றது.
வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற இப் போட்டியில் வட மாகணத்திலிருந்து 10 கழகங்கள் இப் போட்டிகளில் பங்குபற்றின.
இறுதிநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியானது மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றபோது இறுதி போட்டியில் மன்னார் மாவட்ட 'ஏ' அணியினருக்கும் யாழ் மாவட்ட விளையாட்டு கழகத்தினருக்கும் இடையே நடைபெற்றபோது மன்னார் கழகம் 2-0 கோல்களால் யாழ் கழகத்தை வெற்றியீட்டிக் கொண்டது.
இதில் மூன்றாவது இடத்தை மன்னார் மாவட்ட 'பி' கழகம் வெற்றியீட்டிருந்தது.
இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய கழகங்கள் மூன்றுக்கும் முதலாவது வெற்றியீட்டிய கழகத்துக்கு வெற்றி கேடயமும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பணமும், இரண்டாவது இடத்தை பெற்ற கழகத்துக்கு வெற்றி கேடயமும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும், மூன்றாவது இடத்தை பெற்ற கழகத்துக்கு வெற்றி கேடயமும் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் பி. கிறிஸ்துநாயகம், கௌரவ விருந்தினராக மன்னார் அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டீமெல், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவருமான எஸ்.டுல்சன் நாகவத்த, இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு சொர்க்கோ மாஸ்ரர், அசோசியேசன் உப தலைவர் டெஸ்மன் ஜோசப், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப பொருளாளர் ஏ.நாகராஜன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர் ரி.வரதரராஜன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவர் ஈ.அர்னோல்ட் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் 11 வருடங்களாக சொர்க்கோ மாஸ்ரர் சம்மேளனத்தை திறம்பட முன்னெடுத்துவரும் இதன் தலைவர் அன்ரன் பிகிராடோ மற்றும் செயலாளர் பொலிஸ் சார்ஜன்ட் கே.கே. காந்தன் ஆகியோரும் சௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகா
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY