உணவு வங்கி வேலைத்திட்டம்

சாய்ந்தமருது ஜும்ஆப்பெரிய பள்ளி வாயல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உணவு வங்கி வேலைத்திட்ட அங்குரார்பண வைபவம் இடம் பெற்றது.

ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறிய 80 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் ஆப்பெரியவாயலின் நம்பிக்கைபொறுப்பாளர் சபைத்தலைவர் அல்ஹாஜ் ஹிபதுல் கரீம் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ. ஆதம்பாவா, உதவிப்பிரதேச செயலாளர்.எம்.ஐ. முவஃபிகா, திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், ஜும் ஆப்பள்ளிவாயல் உணவு வங்கிக்குழுத்தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம்.ஏ. ஹமீட்,

பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், திட்டமிடல் சிரேஷ்ட உத்தியோகத்தர்களான ஏ.பி.எம். அஸ்ஹர், எம்.ராபிஊ.ஏ. ஜெமீல், ஏ.பஷீர் எம்.எம். ,றியாஸ் இவ் வேலை திட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் எம்.எம். தில்ஷாத் உட்பட சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் ஆப்பெரிய பள்ளிவாயலின் நம்பிக்கை பொறுப்பாளர், சபை உறுப்பினர்கள் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருக்களில் ஒன்றான இவ் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்ட பொருட்கள் யாவும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் ஆப்பெரிய பள்ளிவாயலின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முயற்சியின் பயனாகப் பெறப்பட்டவை என்பதுடன், இவ் வேலைத் திட்டம் சாய்ந்தமருதிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உணவு வங்கி வேலைத்திட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More