posted 22nd April 2022
ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளியிடப்படாமல் இருக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக்கொண்ட சிறப்பு அதிகாரம் படைத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஜனாதிபதித் தேர்தல் மேடையில் நேர்மையாக உண்மையை கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவதாக முழக்கமிட்டு தேர்தலுக்கு சென்ற நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை அனைத்தையும் புறந்தள்ளி விட்டுச் செயற்பட்டு வருகிறார்.
உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் கூக்குரல்கள் வானத்தை நோக்கி முழக்கமிடுகின்றன. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபன்களை அனுபவிக்க நேரிடும் என முழுமையான நம்புகிறேன் என்றார்.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY