ஈழத் தமிழர் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஈழத் தமிழர் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானத்தை எடுக்க வேண்டுமென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஈழத் தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தவில்லை. எனினும் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்தபோது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் நடத்த வலியுறுத்துமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பில் குறிப்பிட்டிருந்தாலும் வலியுறுத்தாது இருந்து அதற்கு பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டிருந்தவர்கள் தற்போது அதனை வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் இலங்கை தமிழரசுக் கட்சியினருமே வாக்கெடுப்பை உத்தியோகபூர்வமாகக் கோரவில்லை. அவர்களும் வாக்கெடுப்பைக் கோரும் பட்சத்தில் அது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படும்.

தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளின் வேகம் தற்போது குறைவடைந்து செல்கின்றது.

இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே, சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்துவதற்கு அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஈழத் தமிழர் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More