posted 15th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை (14) மாலை நீர்வேலியில் நடைபெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ம. கபிலன் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று தொகுதிக் கிளைத் தலைவராக தெரிவானார்.
அ. பரஞ்சோதி செயலாளராகவும், திரு. கஜேந்திரகுமார் பொருளாளராகவும், உப தலைவராக அ. கமலறேகனும், உப செயலாளராக கலைமோகனும் மேலும் 3 பெண்கள் உட்பட 10 நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா,பொருளாளர் கனகசபாபதி, சி.வீ.கே. சிவஞானம், எக்ஸ். குலநாயகம் ஆகியோர் பங்குபற்றினர்.
மறைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் கட்சியின் மூத்த தலைவர் செல்வராஜாவுக்கு கூட்டத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)