
posted 12th February 2023
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
நல்லூரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)