
posted 10th May 2022
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக பிரதமர் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருந்தமையால் அரசியலிலும் மக்கள் மத்தியிலும் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்தியிருந்தமையால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற நிலை அரசியல் உள்ளும் வெளியிலும் வலுப்பெற்று வந்திருந்தன
இந்த நிலையில் பிரதமர் உடன் பதவி விலக வேண்டும் என்று கடும் அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையிலேயே பிரதமர் தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவருடைய அழுத்தங்களினாலும் தான் பதவி விலகப் போவதில்லையென்று பிரதமர் தெரிவித்து வந்த நிலையிலும் திங்கள் கிழமை (09.05.2022) பிரதமர் தனது பதிவியிலிருந்து விலக இருக்கின்றார் என்ற நிலைப்பாடும் காணப்பட்ட நிலையிலேயே இவருடைய பதவி விலகல் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் பிரதமரின் ஆதரவாளர்களால் கொழும்பில் காலிமுகத்திடலில் கலவரம் உருவாக்கப்பட்ட நிலையிலேயே பிரதமரின் இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY